Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

J.Durai
சனி, 18 மே 2024 (11:23 IST)
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். 
 
நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்தார். 
 
அப்போது உணவருந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர். 
 
அதில் ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்து உள்ளார். 
 
அவரை ஓரமாக உட்கார சொன்ன போது ராமசாமிக்கும் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
இதில் வாக்குவாதம் முற்றியதில்  ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி ராமசாமி மற்றும் அவரது தந்தையை தாக்கினர். 
 
மேலும் ஓட்டலில் இருந்த டேபிள் பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். 
 
பின்னர் அவர்களை மிரட்டி விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ராமசாமியை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 
 
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டலை சூறையாடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments