Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டையின்றி சென்ற வெளிநாட்டு நபர் மக்களை கடிக்க முயன்றதால் பரபரப்பு!

Advertiesment
zombie incident

sinoj

, செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (21:20 IST)
சென்னை ராயப்பேட்டை பகுதியில் குடிப்போதையில் சட்டை அணியாத வெளிநாட்டவர் ஒருவர் பைக்கில் சென்ற நபரை கடிக்க முயன்றார்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெளிநாட்டவர் தன்னை கடிக்க முயற்சிப்பதை கண்ட அந்த    நபர் அதிர்ச்சியடைந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த மக்கள்  அந்த நபரை தடுத்தனர். அங்கிருந்த போலீஸார் அந்த நபரை  இழுத்துச் சென்றனர்.
 
வேறு சில வெளிநாட்டவர்களும் குடிபோதையில் இருக்கும்  நபரை கட்டுப்படுத்தி காவல்துறைக்கு உதவினர்.
 
அந்த குற்றவாளி சட்டையின்றி அங்கும் இங்கும் ஓடி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த நிலையில், போலீஸார் அவரைப் பிடித்து  இரும்பு தண்டவாளத்திற்கு எதிராக தடுத்து நிறுத்தியதால், பயணிகளும் பாதசாரிகளும் அங்கு குவிந்தனர்.
 
அந்த நபர் குடிபோதை மற்றும் போதைப்பொருளின் தாக்கத்தால் இப்படி செய்ததாக  கூறப்படுகிறது. அவரது செயல் ஜாம்பியின் நடத்தையுன் ஒப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனடாவிலும் காலை உணவு திட்டம்..! பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு..!!