Publish Date: Sun, 03 Apr 2022 (08:29 IST)
Updated Date: Sun, 03 Apr 2022 (08:04 IST)
இந்தியாவில் ஆங்காங்கே நில நடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவில் திருப்பதி அருகே திடீரென இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நள்ளிரவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 என பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு காண தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது