வங்க கடலில் புயல் உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
வங்கக்கடலில் ஏப்ரல் மே 6 அல்லது 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் மே 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடக்கில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புயலின் தன்மை நகர்வு திசை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.