மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ்: மாணவி மீது வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (11:57 IST)
மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ்
மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் கடந்த 7ஆம் தேதி கலந்துகொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அளித்த சான்றிதழில் சந்தேகம் எழுந்ததால் அது குறித்து மருத்துவ கல்லூரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர் 
 
விசாரணையில் மாணவி அளித்தது போலியான மதிப்பெண் சான்றிதழ் என தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாணவி மீதும் அவரது தந்தை மீதும் மருத்துவ இயக்குனர் கல்வி இயக்குனரக கூடுதல் இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாணவி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments