Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை பார்த்தாவது திருந்துங்கள்: முன்னாள் ரூட் தல மாணவரின் கண்ணீர்க்கதை

என்னை பார்த்தாவது திருந்துங்கள்: முன்னாள் ரூட் தல மாணவரின் கண்ணீர்க்கதை
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (09:06 IST)
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்து கொண்டிருக்கும்போது மாணவர்களோ ரூட் தல என்ற வழியில் அட்டகாசம் செய்து சிலசமயம் போலீஸ் வழக்குகளில் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். அந்த வகையில் முன்னாள் ரூட் தல மாணவர் ஒருவர் தான் போலீஸ் ஆவதற்கு பதில் குற்றவாளியாக இருப்பதாகவும், ரூட் தல காலத்தில் தன்னை ஹீரோவாக பார்த்தவர்கள் தற்போது தன்னை ஜீரோவாக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும் கண்ணீருடன் தனது சோகக்கதையை கூறியுள்ளார்.
 
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த தான் அம்பத்தூரில் இருந்து மந்தைவெளி செல்லும் 41-டி வழித்தட பஸ்சில் நான் ‘ரூட் தல’யாக செயல்பட்டதாகவும் தனக்கு பின்னால் எப்போதும் 50 மாணவர்கள் சூழ்ந்திருப்பார்கள் என்றும் 3 வருட கல்லூரி வாழ்க்கையில் தான் ஹீரோவாக, கெத்தாக செயல்பட்டதாகவும், ஆனால் தற்போது போலீஸார் பதிவு செய்த வழக்கில் சிக்கி சிறை வாழ்க்கையை அனுபவித்து போலீஸ் வேலை கிடைத்தும் சேர முடியாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
 
3 வருடமாக என்னை ஹீரோவாக பார்த்தவர்கள் எல்லாருமே, அப்போது காணாமல் போய்விட்டார்கள் என்றும், என்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவர்கள் எங்கோ ஹீரோவாக இருக்கிறார்கள் என்றும் எனது கனவு தகர்ந்து போனதாகவும் வேதனையுடன் கூறிய அந்த மாணவர் தற்போது தண்ணீர் கேன் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், என்னை போல இப்போது ‘ரூட் தல’யாக செயல்படும் மாணவர்கள் எனது வாழ்க்கையை நினைத்து பாருங்கள் என்றும் என் அனுபவத்தை வைத்தாவது திருந்தி உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள் என்றும் அந்த முன்னாள் மாணவர் வீடியோவில் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம்: ஒகேனக்கல் பகுதியில் பரபரப்பு