Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொண்ணுங்களா இல்ல பொறுக்கிங்களா? ராகிங்கால் தற்கொலை செய்துகொண்ட மாணவி: பொதுமக்கள் கொந்தளிப்பு

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (09:37 IST)
சகமாணவிகளின் ராகிங் கொடுமையால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் சிப்பிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் கூலித்தொழிலாலி. இவரது மகள் திவ்யா. திவ்யா கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திவ்யா சிலம்பம் கலையில் தேர்ச்சி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்றிருகிறார்.
 
இந்நிலையில் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய திவ்யா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய திவ்யாவின் தாயார், தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிச்சியடைந்தார்.
 
பின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன், திவ்யாவின் உடலை கீழே இறக்கினார். திவ்யாவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தார் கதறியது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.
 
மாணவியின் தற்கொலைக்கு காரணம் கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் ராகிங் டார்ச்சரே என தெரியவந்துள்ளது. இதனால் கொந்தளித்த மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் அவர்கள் பெண்களா இல்ல பொறுக்கிங்களா, திவ்யாவின் மரணத்திற்கு காரணமாக மாணவிகளை கைது செய்து கொடூர தண்டனை வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராகிங்கால் மாணவி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

கேரட் அல்வாவில் கலக்கப்பட்ட கெட்டு போன பால்.. திருமண விழாவில் 150 பேர் மயக்கம்..!

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகள் பட்டியல்: சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த இடம்?

பொங்கல் தொகுப்பில் ஊழலா? அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் காந்தி பதிலடி..!

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டர் சிப்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments