Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நள்ளிரவில் நெடுஞ்சாலையில் தவழ்ந்து செல்லும் குழந்தை – அதிர்ச்சி வீடியோ

Advertiesment
Tamilnadu News
, திங்கள், 9 செப்டம்பர் 2019 (17:32 IST)
இடுக்கி அருகே உள்ள நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் குழந்தை ஒன்று தவழ்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்த தம்பதியினர் தமிழகத்திலுள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளனர். சாமி கும்பிட்டு விட்டு நள்ளிரவு நேரத்தில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவர்களது குழந்தை எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலையில் விழுந்திருக்கிறது. நள்ளிரவு நேரமாதலால் தூக்கத்தில் இருந்த குழந்தையின் தாயார் அதை கவனிக்கவில்லை.

கீழே விழுந்து கை, கால்களில் குழந்தைக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த காயங்களுடன் அந்த குழந்தை சாலையை தவழ்ந்து கடந்து சென்றுள்ளது. குழந்தை விழுந்த இடத்திற்கு அருகே சுங்கசாவடி காவலர்கள் குழந்தை ஒன்று நெடுஞ்சாலையில் தவழ்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக குழந்தையை மீட்டு காயங்களுக்கு மருந்திட்டுள்ளனர்.

இந்நிலையில் வீடு சென்றடைந்த தம்பதியினர் தங்கள் குழந்தை காரில் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்திருக்கின்றனர். எங்கு தேடுவது என்று தெரியாமல் தவித்த தம்பதிகளுக்கு சுங்கசாவடியில் குழந்தை இருக்கும் தகவல் தெரியவர உடனடியாக அங்கு விரைந்தனர். குழந்தை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை காரிலிருந்து தவறி விழுந்து தவழ்ந்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீயாக உழைக்க தயாரான தம்பிகள்: அதிரடியில் இறங்கிய சீமான்!!