எத்தனை ஆண்டுகள் தான் இன்னொரு கட்சியிடம் தொகுதிகளை கேட்டு கையேந்தி கொண்டு இருப்பது என்றும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியும் அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறிய போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை, ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதற்கான கட்டமைப்பு இல்லை என்றும் அதை பலப்படுத்துவதற்கான வேலைகளும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்
2006 ஆம் ஆண்டு திமுக பெரும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அப்போது காங்கிரஸ் நினைத்திருந்தால் ஆட்சியில் பங்கேற்று ஒரு சில அமைச்சர் பதவிகளை பெற்று மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தால், ஓரளவு காங்கிரஸ் கட்சி வளர்ந்திருக்கும்
ஆனால் அதை செய்ய தவறிவிட்டது, ஒருவேளை அதேபோன்று மீண்டும் ஒரு வாய்ப்பு 2026 ஆம் ஆண்டு கிடைத்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு சில அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம், ஆனால் தனியாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் முதலில் அவர்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்