Publish Date: Tue, 14 Aug 2018 (12:18 IST)
Updated Date: Tue, 14 Aug 2018 (12:22 IST)
சென்னையில் செயின் பறிப்பு திருடன் ஒருவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அவனை கம்பத்தில் கட்டிபோட்டு அடித்து துவைத்தனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்பொழுது அதிகரித்து வரும் மாபெரும் பிரச்சனை என்பது செயின் பறிப்பு தான். இரு சக்கர வாகனத்தில் வரும் திருட்டு அயோக்கியன்கள், ரோட்டில் செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் சில பெண்கள் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை கொரட்டூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருட்டு அயோக்கியன்கள் ஒரு மூதாட்டியிடமிருந்து நகையை பறித்துச் சென்றார்கள். அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாகனத்தில் பின்னால் சென்றவனை பிடித்து கீழே தள்ளினர். இதில் அந்த திருடன் கீழே விழுந்து நிலை குலைந்தான். மற்றொருவன் தப்பிவிட்டான்.
அவனை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர். பின் போலீஸார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் தண்டையார்பேட்டை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. போலீஸார் அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.