Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (08:19 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது திடீரென வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் இரு கட்சியினரும் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்கள் பிரச்சாரத்துக்கு சென்றபோது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்த வீடியோவை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஆதாரமாக அளித்து புகார் அளித்தனர்
 
இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நத்தம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு  பகுதியில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தேர்தல் பிரசாரம் செய்தபோது பணம் கொடுத்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments