Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சாந்தினி புகார் எதிரொலி: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (19:29 IST)

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்ததை அடுத்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்து காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், ஆகிய ஐந்து பிரிவின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் தான் நிரபராதி என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்