Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்.. என்ன காரணம்?

Advertiesment
Annamalai

Siva

, திங்கள், 5 பிப்ரவரி 2024 (06:57 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை நடத்திவரும் நிலையில் தடையை மீறி சில பகுதிகளில் அவர் ஊர்வலம் சென்றதாக அவர் மீது மூன்று பிரிவுகளில் தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலையின் என்மண் என் மக்கள் என்ற நடைபயணம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்றபோது ஒரு சில பகுதிகளில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் தடையை மீறி ஊர்வலம் செல்வோம் என்று கூறிய அண்ணாமலை மற்றும் பாஜகவினர் யாத்திரை மேற்கொண்டனர். இதனை அடுத்து அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மற்றும் 13 பாஜகவினர் மீது மூன்று பிரிவுகளில் ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Edited by Siva


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்? சட்டசபையை சுற்றி 144 தடை உத்தரவு!