தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று செய்தி வெளியாகியுள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்துள்ளார்
இது குறித்த விசாரணை இன்று நீதிபதி முன் வந்த நிலையில் உரிய தகவலுடன் இதுகுறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து அப்துல் வகாபுதின் விரைவில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த வழக்கின் முடிவில் பள்ளிகள் மூடப்படுமா? என்பது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது