பொன்முடி தொகுதிக்கு இடைத்தேர்தலா? சட்டம் என்ன சொல்கிறது?

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (13:02 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தற்போது காலியாக உள்ளது. 
 
ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ஆக இருப்பவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பதவி இழந்தால் அந்த தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும். மேல்முறையீடு செல்வதாக கூறி, மேல்முறையீடு நிலுவையில் உள்ளது உள்ளிட்ட காரணங்களை கூறி தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இதனால் மேல்முறையீடு வழக்கை விரைந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேல்முறையீடு வழக்கில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதவி இழந்தால் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எந்த ஒரு சட்டமன்ற மக்களவைத் தொகுதியையும் காலியாக வைத்திருக்காமல் உடனடியாக தேர்தலை நடத்தி குடிமக்களின் பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஏற்கனவே சில நீதிமன்ற தீர்ப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. 
 
எனவே  பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜினி தலைவர்.. விஜய் நம்ம வீட்டுப் பிள்ளை! - ரவி மரியா ஓபன் டாக்!

டிரம்பை கண்டித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.. கிண்டலாக மீம்ஸ் போட்ட ஈரான்..

படுத்து கொண்டே பயணம் செய்யலாம்.. ரயில் போல் விமானங்களில் பெர்த் வசதி.. கட்டணம் ரூ.1.30 லட்சம்

தற்கொலைக்கு தூண்டிய ஜெமினி AI.. சாட்பாட் பேச்சை கேட்டு வாலிபர் விபரீத முடிவு

துப்பாக்கி ஏந்தி 50 காவலர்கள்.. 10 ஜீப்பில் பின் தொடர.. விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிப்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments