15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

Prasanth Karthick
வியாழன், 22 மே 2025 (08:38 IST)

வெறும் 15 ஆயிரம் ரூபாய் கடனுக்காக குத்தகைக்கு விடப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கூடுர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி அங்கம்மாள். இவர்களுக்கு வெங்கடேசன் என்ற 9 வயது மகன் உள்ளான். குடும்ப கஷ்டத்தால் சில காலம் முன்னதாக சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து என்பவரிடம் பிரகாசம் ரூ.15 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார்.

 

ஆனால் அவர்களால் அந்த கடன் தொகையை செலுத்த முடியவில்லை. அதனால் அந்த பணத்தை வேலை செய்து கழித்துக் கொள்ள தங்களது மகன் வெங்கடேசனை சில மாதங்களுக்கு வாத்து மேய்க்கும் வேலைக்கு குத்தகைக்கு முத்துவிடம் அனுப்பியுள்ளனர். சிறுவன் வெங்கடேசன் கடந்த சில மாதங்களாக வாத்து மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், அதிகமான வெயிலில் நின்று வாத்து மேய்த்ததால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது.

 

ஆனால் முத்து மற்றும் அவரது குடும்பத்தார் அதை பொருட்படுத்தாமல் சிறுவன் வெங்கடேசை வேலை வாங்கி வந்துள்ளனர். இதனால் மஞ்சள் காமாலை முற்றிய சிறுவன் படுத்த படுக்கையானான். இதனால் பயந்து போன முத்து சிறுவனை ஒரு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் காமாலை முற்றியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

 

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என பயந்த முத்து, அவரது மனைவி தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து சிறுவனின் உடலை அரசந்தாங்கள் அருகே பாலாற்றுக் கரையில் புதைத்துள்ளனர். சிறுவனை தேடி வந்த அவனது பெற்றோரிடம் சரியான பதில் அளிக்காமல் மழுப்பியுள்ளனர்.

 

இதுகுறித்து சிறுவனின் தாயார் அங்கம்மாள் ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முத்துவிடம் போலீஸார் விசாரித்ததில் சிறுவன் மஞ்சள் காமாலையில் இறந்ததும், சிறுவனை பாலாற்று கரையில் புதைத்ததும் தெரிய வந்துள்ளது. 

 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆந்திர போலீஸ் முத்து மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ததுடன், சிறுவனின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக ஆந்திரா கொண்டு சென்றனர். 

 

ரூ.15 ஆயிரம் கடனுக்காக குத்தகைக்கு சென்று 9 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments