Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஜாவின் கோர தாண்டவம்: சாப்பாட்டிற்காக சிறுவன் செய்த வேலை; கதிகலங்கவைக்கும் காட்சிகள்

Advertiesment
கஜாவின் கோர தாண்டவம்: சாப்பாட்டிற்காக சிறுவன் செய்த வேலை; கதிகலங்கவைக்கும் காட்சிகள்
, வியாழன், 29 நவம்பர் 2018 (11:22 IST)
கஜா புயல் பாதிப்பால் சாப்பாடு இன்றி தவித்த சிறுவன் சாப்பாட்டை பார்த்ததும் செய்த வேலை பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
 
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினாலும் சில இடங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் உதவிகள் போய் சேராமல் உள்ளது.
 
இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள கிராமத்தில், நபர் ஒருவர் எடுத்து சென்ற உணவை பெறுவதற்காக சிறுவன் கரையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வந்து சாப்பாட்டு தட்டை வாங்கி சாப்பிட்ட காட்சி கண்கலங்க வைத்தது. இவர்களின் இந்த நரக வாழ்க்கை விரைவில் சீரமைய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தோழமை கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது