Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலத்தகராறில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை

நிலத்தகராறில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (10:14 IST)
நிலத்தகராறில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்து கம்மங்காடு.  ஆவுராணிவயல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வவிநாயகம். வயது 30. விவசாயம் செய்து வந்தார்.  இவர், அறந்தாங்கி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இவரது குடும்பத்தினர் கம்மங்காடு கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மராஜன்வயலைச் சேர்ந்த அர்ச்சுணன் உள்ளிட்டவர்கள், அந்த நிலத்தை செல்வவினாயகத்திடம் இருந்து பறித்து விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு செல்வவினாயகம் குடும்பத்தினர் அந்த புறம்போக்கு நிலத்தில் இந்த ஆண்டு நெல்சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று செல்வவினாயகம் அந்த வயலில், கதிர் அறுவடை செய்வதற்காக கதிர் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அவரது தந்தை செல்வராஜ் மற்றும் உறவினர்களுடன் வயலுக்கு சென்றார்.

அப்போது அங்கு தர்மராஜன்வயலைச் சேர்ந்த அர்ச்சுணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள், இரும்பு கம்பி, கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து செல்வவினாயகம் உள்ளிட்டவர்களை கடுமையாக தாக்கினர். இதில் செல்வவினாயகம், அவரது தந்தை செல்வராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனே அர்ச்சுணன் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வவினாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வவினாயகத்தை படுகொலை செய்த அர்ச்சுணன் உள்ளிட்டவர்களை தேடிவருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

54 வயது ஆசிரியரை திருமணம் செய்த 19 வயது பெண்: கடைசியில் நடந்த விபரீதம்