மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற கரூர் மாணவர் அஜய், வரும் 8 முதல் 13 வரை உத்ரகாண்ட்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வுபெற்றுள்ளார்.
கரூர் அடுத்த காளியப்பனூர் பகுதியை சார்ந்தவர் குணாளன், மகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் அஜய் (வயது 16), கடந்த மாதம் தர்மபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார்.
கடந்த மூன்று மாதங்களாக கரூர் விளையாட்டு மைதானத்தில், பாக்ஸிங் கோச்சர் முத்துக்குமார் மூலமாக கோச்சிங் கற்று வருகிறார். இந்த முகாமில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தங்கம் வென்ற அஜய் வரும் 8 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை உத்திரகாண்ட் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்று, இன்று (04-06-19) இரவு சென்னை சென்று, அங்குள்ள சக மாணவர்களுடனும், மாஸ்டர்களுடனும்,ரயில்வண்டி மூலம் உத்திரகாண்ட் கிளம்ப உள்ளார்.
அஜய்க்கு வாழ்த்துக்கள் பெருகி வரும் நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், வாழ்த்துக்களும், நிதி உதவியும் வழங்கி பாராட்டியுள்ளார். மேலும், மாணவர் அஜய் கரூர் விளையாட்டு மைதானத்தில் கோச்சர் முத்துக்குமார் மூலம், தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது தந்தை குணாளன், தாய் மகேஸ்வரி மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டுமில்லாமல் இதர பாக்ஸிங் மாணவர்களும் அஜயை உற்சாகமடைய செய்து வருகின்றனர்