மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
									
										
								
																	
	தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான  அழகர்(48) இன்று அதிகாலை தனது குடும்பத்தினர் 8 பேருடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள குலதெய்வம் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	அழகர் குடும்பத்தினர் சாமி கும்பிட்டுவிட்டு மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டு அங்கிருந்து மதுரைக்கு ஆட்டோவில் புறப்பட்டனர்.  அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அழகரின் மகள் வீரலட்சுமி (12) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
									
										
										
								
																	
	விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்த வீரலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சாமி கும்பிட சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.