Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (14:53 IST)
ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக சிறுமிகள் பலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
இந்நிலையில் கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்8 முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஊட்டிக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டிக்கெட் பரிசோதகரான அனீஷ் குமார் (25) எஸ்8 பெட்டிக்கு சென்று அங்கிருந்த 6 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.
இதனைக்கண்ட சிறுமியின் தந்தை அதிர்ந்துபோய், அனீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின் அவனை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தார்.
 
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அனீஷ் குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்