Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி இந்துத்துவாவுக்கு இடமில்லை; பாஜக அமைச்சர்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (14:40 IST)
வரும் 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக இந்துத்துவாவை பாஜக முன்னெடுக்காது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

 
வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடிவருகிறது. பாஜகவை வீழ்த்த அனைவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நாடுமுழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாகவும், இந்துத்துவத்தை முன்னிறுத்துவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
 
இதனால் பாஜகவுக்கு எதிரான அலை மிகவும் பலமடைந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
 
2019 தேர்தலில் மோடி தனி பெரும்பான்மை பெறுவார். அவருடைய ஒரே குறிக்கோள் நாட்டின் முன்னெற்றம் மட்டுமே. இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த அரசு வறுமையில் வாடும் சிறுபான்மையினருக்கு நலத் திட்டங்களை அவர்கள் வீட்டு வாயிலில் சென்று சேர்க்கிறது. வரும் தேர்தலில் பாஜக இந்துத்துவா பற்றி நிச்சயம் முன்னிறுத்தாது. பாஜக ஒரே பிரச்சாரம் முன்னேற்றம் மட்டுமே என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments