குளித்தலை அருகே ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்த 16 வயது சிறுவன் மீது எதிர்பாராத விதமாக டிராக்டர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த கொடிக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் சக்திவேல்.
இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு குளித்தலை அருகே மணத்தட்டையில் உள்ள தங்கலட்சுமி ஆட்டோ ஒர்க் ஷாப்பில் கடந்த இரண்டு மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பட்டறைக்கு வந்த டிராக்டரை பழுது பார்த்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் முன்னோக்கி நகர்ந்ததில் சிறுவன் சக்திவேல் டிராக்டர் டயரில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனின் உடலைக் கண்டு உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து சக்திவேல் தந்தை காளிதாஸ் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஆட்டோ ஒர்க் ஷாப் உரிமையாளர் வடக்கு மைலாடியைச் சேர்ந்த செந்தில்குமார் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.