மது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி

திங்கள், 25 ஜூன் 2018 (10:50 IST)
சிவகாசியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்த 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம்(15), முத்தாட்சிமடத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தனர். குடித்துமுடித்து விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
 
இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். டாஸ்மாக் கடையில் காலாவதியான மது விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அந்த கடை உடனடியாக மூடப்பட்டது.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், காலாவதியான மது விற்கப்பட்டதா அல்லது மதுவில் விஷம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இது என்னடா தினகரனுக்கு வந்த சோதனை - புதிய கட்சி தொடங்கும் டிடிவி பாஸ்கரன்