Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.93.57லட்சம் ரொக்கம்,1.9 கிலோ தங்கம்,3.4கிலோ வெள்ளி.கடந்த 12 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை!

Advertiesment
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.93.57லட்சம் ரொக்கம்,1.9 கிலோ தங்கம்,3.4கிலோ வெள்ளி.கடந்த 12 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை!

J.Durai

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:05 IST)
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் 
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்  உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
 
அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில்  தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள்,  வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர்  எண்ணினர். 
 
அப்போது கடந்த 12 நாட்களில் கோயில்  உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை   எண்ணியதில்  93 லட்சத்து,57 ஆயிரத்து,414  ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 990 கிராம் தங்கமும், 3 கிலோ 475 கிராம்  வெள்ளியும், 217 அயல்நாட்டு நோட்டுகளும், 1011 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றது.
 
அதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 521 ரூபாய் ரொக்கமும்,உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் ரூ. 12,805  ரொக்கமும்,போஜீஸ்வரர் கோயிலில் ரூ.5,772 ரொக்கமும் கிடைக்கப் பெற்றன  என கோயிலின் இணை ஆணையர்  பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்.! பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு.!!