90 களின் காலக் கட்டத்தில் இருந்த பைக்குகள் பற்றி தகவல் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகள் 90 களின் காலக் கட்டத்தில் மத்திய தர வர்க்க மக்களின் வீடுகளில் அலுவலகப் பயன்பாட்டிற்கு என பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பின் விவசாயிகள் , பால் வி நியோகிப்பவர்களுக்கு ஏதுவான டிவிஎஸ் . அதைவிடக் கூடுதலாக சிசி கொண்ட டிவிஎஸ் எக்ஸ்.எல் பஜாஜ் எம் .ஐ.டி போன்றவை மக்களை வெகுவாகக் கவர்ந்து.
அப்போதெல்லாம் பெரும்பாலும் போக்குவரத்து வசதிக்கான மக்கள் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை நம்பிக்கொண்டிருந்தனர்.
அதனால் பெரும்பாலானோர் பைக்குகள் வைத்திருப்பதை ஆடம்பரமாகக் கருதத் தொடங்கிய காலக் கட்டம் அது. அப்போது பஜாஜ் ஸ்கூட்டர், யமஹா அர் எக்ஸ் 100 , சுசுகீ, கவாஸ்கி, ராயல் என்பீல் புல்லட் போன்ற நிறுவனங்களின் பைக்குகள் பிரபலம். ஆனால், 2000ல் ஒவ்வொருவரின் வீட்டிலும் எதாவதோடு பைக் இருப்பது கவுரமாகப் பார்க்கப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில் வாகனம் உயர்தர பிராண்டுகள் வாங்கும் அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டினர்.
இன்று எல்லோரது வீட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட பைக்குகள் இருப்பதைக் காண முடிகிறது. இப்போது ஆடம்பரம் அத்தியாவசியம் என்பதைக் காட்டிலும் சமூகத்தில் தங்களின் ஸ்டேட்டஸ்ஸை காட்டுவதற்கும் இந்த பைக்குகளுடன் இளைஞர்கள் வலம் வருகின்றனர்.