Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சியில் சிறுமியை சீரழித்த காதலன் உட்பட 9 பேர் ! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (16:18 IST)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, போலிஸார்,  குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. 
இந்நிலையில் தற்போது காதலனால் காரில் கடத்திச் சென்று பலாத்தாரம் செய்ய்யப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர், அடுத்தடுத்து தன் நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஜூலை 5 ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில், 16 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
 
இந்த புகார் குறித்து வழக்குப்பதிந்த போலீஸார், சிறுமியுடன் நெருங்கிப்பழகியதாக அமானுல்லா என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், கடந்த 4 ஆம் தேதி சிறுமியை காதலிப்பதாகக் கூறி , காரில் கடத்திச் சென்று வன்புண்ர்வு செய்துள்ளார்,. பின்னர் சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தால் பிரச்சனை உண்டாக்லும் என்று கருதி, வால்பாறை சாலையில் தனியாக விட்டுச் சென்றுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து தன் செல்போன் மூலம் தனது நண்பனை அழைத்த சிறுமி, தன்னை அழைத்துப் போகுமாறு கேட்டுள்ளார். அந்த நபரும் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு ஆழியாறு என்ற பகுதிக்கு கூட்டிச் சென்று, அங்கு  அனைவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேலும் சில நண்பர்களை அங்கு வரவழைத்து சிறுமியை சீரழித்ததாகத் தெரிகிறது. 
 
பின்னர் அந்த கொடியவர்களுடன்  இருந்து தப்பிய சிறுமி, நடந்தவற்றை தன் வீட்டாரிடம் கூறியுள்ளார். அதனையடுத்து பொள்ளாச்சி காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்ததன் பேஸ்ரீப் போலீஸார் நடவடிக்கை எடுத்து 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்