அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (09:56 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்.


கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments