11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 9,844 மாணவர்கள் ஆப்சென்ட்.. அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 5 மார்ச் 2024 (09:02 IST)
நேற்று 11ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய நிலையில் முதல் நாள் இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் இருந்து 9,844  மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய நிலையில் நேற்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது என்பதும், முதல் நாளில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு எழுத நான் 9,844 மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வரவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 தமிழக முழுவதும் 332 மையங்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருந்த நிலையில் 9,844 மாணவர்கள் தேர்வு எழுத ஏன் வரவில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் தமிழ் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments