Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

Advertiesment
பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

Siva

, ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (14:41 IST)
பந்தயம் வைத்து நாய் சண்டை நடத்தியதாக 81 பேருக்கு கைது செய்யப்பட்ட நிலையில் 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு நாய் சண்டை பந்தயம் நடத்தப்பட்டதாகவும் இந்த பந்தயம் ஒரு பிரபலத்தின் பண்ணை வீட்டில் வைத்து நடத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் திடீரென அந்த பண்ணை வீட்டில் சோதனை செய்து 19 வெளிநாட்டு வகை நாய்கள் மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த பந்தயத்தை நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

காவல்துறையினர் சோதனை செய்ய வந்த போது அங்கிருந்து சிலர் சுவற்றில் ஏறி குதித்து தப்பிக்க முயற்சித்தனர். அதில் பலர் காவல்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து உரிமம் பெற்ற ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

சண்டையில் ஈடுபடுத்தப்பட்ட சில நாய்கள் காயத்துடன் இருந்ததால், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதற்காகவே சமூக வலைதளத்தில் ஒரு குழு அமைத்து அதில் 250 பேருக்கு அதிகமானோர் உறுப்பினராக இருப்பதாகவும், முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி