Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்கத்தில் இருந்து சென்னை வந்தது ஆக்சிஜன் ரயில்: பற்றாக்குறை தீருமா?

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (06:48 IST)
மேற்குவங்கத்தில் இருந்து சென்னை வந்தது ஆக்சிஜன் ரயில்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதலாவது விரைவு ரயில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சென்னை வந்தது
 
ரயிலில் வந்த 80 மெட்ரிக் ஆக்சிஜனை நான்கு கண்டெய்னர் லாரிகளில் மாற்றப்பட்டு தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை வந்த ஆக்சிஜன் கூடிய ரயிலை வரவேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
மேற்கு வங்கத்தில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போது சென்னை வந்துள்ளது. இந்த ஆக்சிஜன் இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஓரளவிற்கு தீரும் என்றும் கூறினார். அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களுடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரயில் நிலையத்தில் ஆக்சிஜன் ரயிலை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments