அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்பதால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் 0 பொறியியல் கல்லூரிகள் உள்கட்டமைப்பு வசதி போதிய அளவில் இல்லாததால் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.