தனது சொத்துக்கு போலி பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதியவர் ஒருவர் 8 ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு அளித்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறலுடன் கூறும் வீடியோவை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:
திராவிட மாடல் நல்லாட்சிக்கு சான்று இதோ!
திமுக அரசு எப்போது திருந்தும், சேவை பெறும் உரிமை சட்டத்தை எப்போது கொண்டு வரும்?
தமது சொத்துக்கு போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து 8 ஆண்டுகளாக அலைந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான முதியவரின் குமுறல்.
ஏழை மக்களின் இத்தகைய குமுறல் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும். எந்த ஒரு சேவையையும் குறித்த காலத்திற்குள் மக்களுக்கு வழங்குவதற்கான சேவை உரிமை சட்டம் கொண்டு வருவதன் மூலம் தான் இத்தகைய மக்களுக்கு நீதி வழங்க முடியும்.!