Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா சம்பவம்: 8 ஆண்டுகள் நிறைவில் நிர்பயா தாயின் ஆவேச பேட்டி!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (09:51 IST)
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நடந்த இந்த சம்பவம் உலகையே உலுக்கியது என்றும் கூறலாம். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் நிர்பயா சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைகிறது
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கூறியபோது ’எனது மகளுக்கு நீதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால் நான் மௌனமாக உட்கார்ந்து கொள்வேன் என்று அர்த்தமல்ல. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அனைவரின் நீதிக்காக தொடர்ந்து போராடுவேன். அனைவரும் சேர்ந்து பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆஷாதேவியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நிர்பயா சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும் இந்தியாவில் பெண்களுக்கு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்பதே வருத்தமான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்