Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-சேலம் 8 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றம்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (12:00 IST)
சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச்சாலை திட்டத்தின்கீழ் 8 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச்சாலைகள் மட்டுமே போடப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து  8 வழிச்சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது.

இதன்படி சென்னை - சேலம் இடையே தற்போது 6 வழிச்சாலையே அமைக்கப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அந்த சாலை 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வனப்பகுதி வழியே 13 கிலோ மீட்டருக்குப் பதில் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த திட்டத்திற்கான எதிர்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாற்றத்தினால் 8 வழிச்சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த 6 வழிச்சாலைக்கு  சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments