Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் 77% வாக்குப்பதிவு

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (20:09 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 258 வாக்கு சாவடியில் நடைப்பெற்றது. மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்.கே.நகர் பகுதியில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மொத்தம் 258 வாக்குசாவடிகளிலும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
 
மதியம் 1 மணி நிலவரப்படி 41.06 சதவீத வாக்குகள் பதிவானது. அதன் பின்பு ஆர்.கே.நகரில் மழை பெய்தது. ஆனாலும், பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.
 
ஆனால், 5 மணி வரை மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், 5 மணிக்கு முன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 258 வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
 
மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வரும் ஞாயிறு (24.12.2017) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments