Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்: அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (13:46 IST)
பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு  கட்டாயம் என்றும் ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் பொது தேர்வு எழுத அனுமதி உண்டு என்று வெளியான செய்தி தவறானது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
தற்போது 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் அனைத்து மாணவர்களையும் பொது தேர்வு எழுத வைக்க வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் ஒரு வருடத்தில் பள்ளிக்கு வந்தாலே பொதுத்தேர்வு அல்லது எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் இந்த செய்தியை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுத்துள்ளார். வரும் கல்வி ஆண்டில் 75% வருகைப்பதிவு இருக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார் ஆண்டுக்கு மூன்று நாட்கள் வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பரவும் செய்திகள் உண்மை இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னா பெயர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments