Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

70 வயதான முதியவருக்கு சிறுநீரகக் குறைப்பு சிகிச்சை மூலம் கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தத்திற்கு வெற்றிகரமாக சிகிச்சை!

70 வயதான முதியவருக்கு சிறுநீரகக் குறைப்பு சிகிச்சை மூலம் கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தத்திற்கு வெற்றிகரமாக சிகிச்சை!

J.Durai

சென்னை , வியாழன், 30 மே 2024 (16:03 IST)
கடந்த ஆறு ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தத்தாலும் அவதிப்பட்டு வந்த 70 வயது முதியவருக்கு, ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிறுநீரகக் குறைப்பு என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
2019 முதல் உயர் இரத்த அழுத்தத்துடன் முதியவர் போராடி வந்தார். உயர் இரத்த அழுத்தத்திற்கு ஐந்து வெவ்வேறு மருந்துகளை எடுத்துக் கொண்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மருந்தின் அளவை அதிகரித்தும் கூட, அவரது இரத்த அழுத்தம் 200/120mm Hg என்ற அளவிற்கு அதிகமாகவே இருந்தது. மேலும் அதனுடன் தொடர்புடைய, அவரது வாழ்க்கை தரத்தைப் பாதித்து வந்த அறிகுறிகளான தலைவலியும், படபடப்பும் அடிக்கடி தோன்றின.
 
இத்தகைய கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பல கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தவல்லது.
 
அதற்கு தீர்வாக, தலைமை இருதயநோய் நிபுணரும் துறைத் தலைவருமான பேராசிரியர் மருத்துவர் அஜித் பிள்ளை, அதிநவீன மின்சார பண்பேற்றப்பட்ட சிறுநீரகக் குறைப்பு சிகிச்சையைப் பரிந்துரைத்தார்.
 
நோயால் பாதிக்கப்பட்டவரின் சிறுநீரக நரம்பு கிளர்ச்சித்திறனைக்  கட்டுப்படுத்த கதிரியக்க அதிர்வெண் நீக்கம் கேத் லேபில் செய்யப்பட்டது. 
 
இந்த நுண்துளை அறுவை சிகிச்சை இரத்த அழுத்தத்தின் நீண்ட கால நிலைப்படுத்தலை அடைய நரம்பு செயற்பாட்டையும் மட்டுப்படுத்துகிறது.
 
சிகிச்சைக்குப் பிறகு, அவர் 48 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நிலையைப் பொறுத்து, சிலர் 24 மணி நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்ப்படலாம். ஒரு மாதத்திற்குப் பிறகு, இரத்த அழுத்தம் தொடர்ந்து சரியான 140/80mm Hg கட்டுப்பாட்டு அளவீடுகளிலேயே இருந்தது. 
 
அவர் முன்பு அனுபவித்த சிரமமான அறிகுறிகளில் இருந்து விடுபட்டு, BP மருந்துகளைக் கணிசமாகக் குறைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனு..! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!