7 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மியான்மர் நாட்டில் மரண தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	மியான்மர் நாட்டில் நடந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக 7 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஏழு பல்கலைக்கழக மாணவர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது
	 
	இந்த நிலையில் கடந்த ஆண்டு இராணுவ ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து மரண தண்டனையை இராணுவம் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்று மக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர்
	 
	மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக கட்சி தலைவர் ஆங் சான் சூகியின் அரசை கலைத்துவிட்டு கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது