7 குளங்களைக் காணவில்லை- மாவட்ட ஆட்சியரிடம் புகார்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:44 IST)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், 7 குளங்களைக் காணவில்லை என்று சினிமா பாணியில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் புதூர் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் தனியார் நிலம் ஆக்கிரம்பிக்கு செய்ததாகவும் இதனால், அங்கிருந்த  7 குளங்களைக் காணவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சிவக்குமார் என்ற இளைஞர் புதூர் கிராமத்தில் இருந்த 7 குளங்களை 2018 முதல் காணவில்லை என்று வட்டாச்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல அதிகாரிகளிடம் புகாரளித்துள்ள நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்பபடுகிறது.

இந்த நிலையில், இன்று, 7குளங்களைக் காணவில்லை என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பெயர் பலகையுடன் அவர், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இக்குளங்ககைக் காணாததியால், தன்  வாழ்வாதாரம் மற்றும் கால்நடைகளின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments