Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: இதுவரை 7 லட்சம் விண்ணப்பம், மேலும் அதிகரிக்கும் என தகவல்

Advertiesment
tnpsc
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:44 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து ஏராளமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
மேலும் வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மொத்தம் காலியிடங்களில் 7382 என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் எகிறத் தொடங்கிய தினசரி கொரோனா! – இந்திய நிலவரம்!