Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதகையில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: தினகரன், அண்ணாமலை இரங்கல்

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (16:59 IST)
உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இன்று 7 தொழிலாளர்கள்   உயிரிழந்தனர்.
 
உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணி இன்று  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்த்போது, பழைய கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி  7 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன், உதகை அருகே கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அதே விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

‘’ஊட்டியை அடுத்த லவ்டேல் காந்திநகர் பகுதியில் புதிய வீட்டிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தபோது, எதிர்பாராத விதமாக, மண் சரிவு ஏற்பட்டு, மண்ணில் புதைந்ததால், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும், தமிழக பாஜக  சார்பாக ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments