Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதகையில் மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு- 4 பேர் கைது

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (21:17 IST)
உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இன்று 7 தொழிலாளர்கள் உயிரிந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணி இன்று  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்த்போது, பழைய கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட  7 பேர்  உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கட்டட உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேஸ்திரிகள், ஜாகிர் அகமது, ஆனந்த்ராஜ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அனுமதிக்கு மாறாகவும், பணியாளர்கள் பாதுகாப்பின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட இந்தக் கட்டடத்திற்கு உதகை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே? சாராய வியாபாரியால் கல்லூரி மாணவர் கொலை.. அண்ணாமலை

பரிட்சைக்கு நேரமாச்சு.. பாராகிளைடில் பறந்து சென்ற கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments