தமிழகத்தில் இன்று 6711 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:28 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 6711 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 940,145 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6711 பேர்களில் 2105 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,927 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 2339 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 880,910 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 82,202 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 202,71,805 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments