Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை - எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 26 மே 2022 (12:10 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல். 

 
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே இருந்தது.
 
தற்போது 28 ஆம் தேதியுடன் அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 
அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 
ஆனால் தற்போது வெளியான அறிக்கையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments