தமிழகத்தில் இன்று புதிய உச்சம்: ஒரே நாளில் 5849 பேருக்கு கொரோனா பாதிப்பு

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (18:35 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5849 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5849 பேர்களில் 1,171 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89,561 
ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 74 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 இன்று சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று 4,910  பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 1,31,583 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 60,112 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments