இந்திய மக்களுக்கும் தங்கத்துக்குமான தொடர்பு என்பது அவர்கள் ஓவ்வொரு வீட்டு விஷேசத்தின்போதும் வெளிப்படும்.
இந்தநிலையில் இந்திய வரலாற்றில் முதன்முறையாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எக்ஸில் 10 கிராம் தங்கத்தின் ஆகஸ்ட் மாதத்தின் விலை ரூ.50,085 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 1 கிலோ வெள்ளிக்கான செப்டம்பர் மாதம் விலை ரூ.61,255 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சென்னை நிலவரத்தின்படி 1 கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 ஆக உயர்ந்து ரூ.38,280 ஆக அதிகரித்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 40,152 ஆக உள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே போவதால் மக்களி பட்ஜெட்டிற்கு எட்டாக்கனியாக தங்கம் ஆகிவிடுமோ எனப்பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.