சென்னையில் பிரபலமாக உள்ள பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னையின் திருவெல்லிக்கேணி பகுதியில் பிரபலமாக உள்ள உணவகம் பிலால் பிரியாணி. இங்கு நேற்று வழக்கம் போல மக்கள் பலர் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட நிலையில் சிலர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஊழியர்கள் உடனே கடையை மூடிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
18க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூடிய கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் பிலால் கடையில் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 55 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K