Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

55 பயணிகள் ஏற்ற மறுத்த விவகாரம்: சிவில் விமான இயக்குனரகம் நோட்டீஸ்

plane
, செவ்வாய், 10 ஜனவரி 2023 (20:56 IST)
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில்  நேற்று 55 பயணிகளை ஏற்ற மறுத்தது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை கேட்டுள்ளது.

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில்  நேற்று காலை 6.40 க்கு கோ ஃபர்ஸ்ட் என்ற நிறுவனத்திற்குரிய விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது.

இந்த விமானத்தில் ஏற வேண்டிய பயணிகள் 55 பேரை ஏற்றாமலேயே அந்த விமானம் புறப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விமான நிறுவனத்தின் செயலுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்த நிலையில், பயணிகளை ஏற்றாமல் சென்றதற்கு கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது.

இந்த நிலையில் பணியில் இருந்த ஊழியர்களை பணி நீக்கம்  செய்துள்ள போதிலும் கொ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாதிக்கப்பட்ட 55 விமான பயணிகளுக்கு தலா 1 விமான டிக்கெட் வழங்கப்படும் எனவும் இதை வரும் டிசம்பருக்கும் உள் நாட்டிற்குள் பயணிக்க பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வருமானம்!