Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் அதிகாரிகளுக்குகைதுப்பாக்கிகளைகையாளும் பயிற்சியில்530 பேர் பங்கேற்பு!

J.Durai
சனி, 13 ஜூலை 2024 (14:13 IST)
தமிழக காவல்துறை ஏ.டி. ஜி. பி  டேவிட்சன் தேவாசீர்வாதம் (சட்டம்-ஒழுங்கு) உத்தரவின்பேரில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி  மேற்பார்வையில், திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை கையாளும் பயிற்சி மற்றும் வாராந்திர கவாத்து பயிற்சி  மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் திருச்சி மாநகரில் உள்ள சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம், குற்றப்பிரிவு போலீஸ் நிலையம், மாநகர ஆயுதப்படை அதிகாரிகள் என மொத்தம் சுமார் 530 பேர் கலந்து கொண்டனர். 
 
இதில் 46 போலீஸ் அதிகாரிகளுக்கு கைதுப்பாக்கியை எப்படி கையாளுவது, துப்பாக்கிகளின் உதிரி பாகங்களை தனிதனியாக பிரித்தும், மீண்டும் துப்பாக்கிகளை ஒன்றினைத்து, அவற்றை பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
 
மேலும் போலீசார் வாரந்திர கவாத்து மேற்கொண்டனர்.
 
மேற்கண்ட பயிற்சியில் உதவி கமிஷ்னர்கள், அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் கலந்து கொண்டார்கள். 
 
பயிற்சியின்போது காவல் துணை கமிஷ்னர்கள் வடக்கு, தெற்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை கமிஷ்னர் (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments